லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபர் கைது


லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 March 2022 12:32 AM IST (Updated: 25 March 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையில் லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பழைய ஜோலார்பேட்டை இடையம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (வயது 52) என்பவர் தன்னுடைய செல்போனில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை செல்போன் மூலம் ஜெராக்ஸ் பிரிண்ட் எடுத்து கொண்டு அதனை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5010 மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை  திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story