மோட்டார் சைக்கிள் திருட்டு
ஆவியூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்றது.
காரியாபட்டி,
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா மொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 23). இவர் காரியாபட்டி, ஆவியூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜபாண்டி மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தனியார் கம்பெனி எதிரே உள்ள ஒரு டீக்கடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ராஜபாண்டி ஆவியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story