தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 25 March 2022 12:34 AM IST (Updated: 25 March 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


குண்டும், குழியுமான சாலைகள் 
புதுக்கோட்டை மாவட்டம், ராஜேந்திரபுரம் கிழக்கில் இருந்து மாங்குடி செல்லும் இணைப்பு தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராஜ்குமார், ராஜேந்திரபுரம், புதுக்கோட்டை. 
இதேபோல் புதுக்கோட்டை தேங்காய்தோப்பு டி.வி.எஸ்.கார்னரில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் மருப்பினிரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தேங்காய்தோப்பு, புதுக்கோட்டை. 

பயனற்ற தண்ணீர் குழாய்கள் 
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். வெளியில் இருந்து வரும் பக்தர்கள் தங்களின் கால்களை கழுவி விட்டு வரவேண்டும் என்பதற்காக கோவிலின் நுழைவு வாயில் முன்பு தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த குழாய்கள் அனைத்தும் பயனற்று தண்ணீர் வராமல் உள்ளதால் பக்தர்கள் தங்களின் கால்களை கழுவாமலேயே கோவிலுக்குள் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலசுப்பிரமணியம், ஸ்ரீரங்கம், திருச்சி. 

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் மளிகை கடைகள், ஓட்டல் கடைகள், பலகாரக் கடைகள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்பகுதியில் தார் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி குப்பை மேடுபோல் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இந்த மழைநீர் பிளாஸ்டிக் பைகளில் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் அதிக அளவில்  உற்பத்தியாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வாங்கல், திருச்சி. 

மின் விளக்கு அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நெய்வேலி வெள்ளப்பாறை பஸ் நிறுத்தம் முதல் நெய்வேலி பஸ் நிறுத்தம்  வரை உள்ள சாலையில்  மின் விளக்கு இல்லாமல் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் நடந்துசெல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சூர்யா, நெய்வேலி, திருச்சி. 

குடிநீர் குழாயில் உடைப்பு
திருச்சி மாவட்டம், தொட்டியம் மெயின் ரோடு அருகே அக்ரஹாரம் செல்லும் வீதியில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 7 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. குழாயில் இருந்து வெளியேறும் நீர் சாலையில் தேங்கி பள்ளம் ஏற்பட்டு குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் இதில் தங்களின் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தொட்டியம், திருச்சி. 

குண்டும் , குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், ஸ்ரீரங்க ராயபுரத்தில் இருந்து குமரக்குடி வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குமரக்குடி, திருச்சி. 

தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் 
திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட  புதிய வார்டு 9-ல் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே உள்ள  மேற்கு தொகுதிக்கு உட்பட்ட  சவேரியார் கோவில்   தெருவில்  பாதாள சாக்கடை சீரமைப்பு பணி  சரிவர நடைபெறாததால்   கழிவுநீா் தேங்கி இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம்  உள்ளது.   சாக்கடைக்கு அருகிலேயே  குடிநீர் தொட்டி உள்ளதால்  மழைக்காலங்களில் குடிநீரும், கழிவுநீரும் கலக்கிறது. இந்தத் தெருவில் உள்ள  குழந்தைகளும் ,முதியோர்களும்  அதிகமாக நோய்வாய்ப்படுகிறார்கள்.  ஒரு சைக்கிள் கூட செல்ல முடியாத அளவுக்கு இந்த நடைபாதை உள்ளது.   குழந்தைகள் அடிக்கடி இந்த பாதையில் சென்று கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுபா, உறையூர், திருச்சி. 

வேகத்தடை அமைக்க வேண்டும் 
திருச்சி பாலக்கரை- மதுரை ரோடு பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவ- மாணவிகள், பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் இந்த சாலையை கடந்து செல்கிறார்கள். இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்  என கேட்டுக்கொள்கிறோம். 
ரஹ்மத்துல்லாஹ், பாலக்கரை, திருச்சி.

Next Story