ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை


ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை
x
தினத்தந்தி 25 March 2022 12:50 AM IST (Updated: 25 March 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை பெய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வன்னியம்பட்டி அருகே ரோட்டில் மரம் சாய்ந்து விழுந்தது. இதன் காரணமாக நள்ளிரவில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு 6.30 மணி முதல் 7 மணிவரை மல்லி, மாநகசேரி, அழகாபுரி போன்ற பகுதிகளில் மழை பெய்தது. மழையின் காரணமாக கடந்த 20 நாட்களாக வெப்பம் அதிகரித்திருந்த நிலையில் குளிர்ச்சியான நிலை நிலவியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மீன்வெட்டி அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.


Related Tags :
Next Story