இந்திய ஜூடோ அணியில் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வு
கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்திய ஜூடோ அணியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
கரூர்,
கேலோ இந்தியா மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து மத்திய பிரதேசம் போபாலில், இந்திய அணிக்கான ஜூடோ தேர்வு போட்டியை நடத்தியது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து 3 வீரர்களும், ஒரு வீராங்கனை என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்ற ஒரே ஒரு வீராங்கனை கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி காவியா ஆவார். இப்போட்டியில் தேர்வுபெற்ற மாணவியை பள்ளி தாளாளர் ஆர்த்தி ஆர்.சாமிநாதன், ஆலோசகர் பழனியப்பன், முதல்வர் பிரகாசம், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் பயிற்சி அளித்த பயிற்சியாளர் சண்முகத்தையும் பாராட்டினர்.
Related Tags :
Next Story