விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 25 March 2022 1:15 AM IST (Updated: 25 March 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (வயது 62). இவர் தினமும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் ராமன் காரியாபட்டி பஜார் அருகே ஒரு டீக்கடை முன்பு படுத்து இருந்ததை பார்த்தவர்கள் அவரது மகன் கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கணேசன் டீக்கடை முன்பு படுத்திருந்த தந்தை ராமனை எழுப்பினார். அப்போது அவர், எனக்கு வாழ பிடிக்கவில்லை. இதனால் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். இதனால் பதறி போன கணேசன், தந்தையை மீட்டு ஆட்டோ மூலம் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமன் இறந்தார்.
 இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story