தனியார் புகையிலை நிறுவன தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


தனியார் புகையிலை நிறுவன தொழிலாளர்கள்  காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 1:23 AM IST (Updated: 25 March 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் தனியார் புகையிலை நிறுவன தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:
கும்பகோணத்தில் தனியார் புகையிலை நிறுவன தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தொழிலாளர்கள் வேலையிழப்பு
கும்பகோணத்தில் 40 ஆண்டுகள் பழமையான தனியார் புகையிலை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மெல்லும் புகையிலைக்கு தடை விதித்தது. இதையடுத்து இந்த தனியார் புகையிலை நிறுவனம் மூடப்பட்டது. இதனால் இந்த நிறுவனத்தில் வேலைபார்த்த 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 
காத்திருப்பு போராட்டம் 
தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி இந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்தநிலையில் நேற்று காலை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தனியார் புகையிலை நிறுவன உரிமையாளர் வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்க வேண்டும், தனியார் நிறுவனம் மூடப்பட்டதால் வேலை இழந்துள்ள தங்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story