கோவில் குள ஆக்கிரமிப்பு அகற்றம்


கோவில் குள ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 25 March 2022 1:24 AM IST (Updated: 25 March 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடியில் கோவில் குள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

திட்டக்குடி, 

திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை ஆக்கிரமித்து சிலர் கட்டிடங்கள் கட்டியிருந்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இருப்பினும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் ஆக்கிரமிப்பில் இருந்த தனியார் மருத்துவமனை கட்டிடம் மட்டும் இடித்து அகற்றப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த கட்டிடத்தை அகற்றுவதற்கான தடை உத்தரவு நீக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் பரணிதரன், திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் செயல்அலுவலர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில்  பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. அப்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க விருத்தாசலம் ஏ.எஸ்.பி. அங்கித்ஜெயின், திட்டக்குடி டி.எஸ்.பி. சிவா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story