மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து உண்ணாவிரதம்-ஆப்செட் பிரிண்டர்ஸ் கூட்டத்தில் தீர்மானம்
மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க ஆப்செட் பிரிண்டர்ஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர்,
கரூர் ஆப்செட் பிரிண்டிங் வெல்பேர் அசோசியேசன் சார்பில் ஆலோசனை கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். இதில் அச்சகங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகமாகியுள்ளது குறித்தும், தற்போது பேப்பர் மற்றும் அச்சு, மை, பசை போன்றவை விலையேற்றம் அடைந்து வருவதாலும், அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைப்பது. கரூரில் உள்ள அனைத்து அச்சகங்கள் வாழ்வாதாரம் காப்பாற்ற வேண்டி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை தலைவர் ராஜதுரை, பொருளாளர் கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story