கொள்ளிடத்தில் 2-வது குடிநீர் சேகரிப்பு கிணறு அமைக்கும் பணி
தஞ்சை மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 2-வது குடிநீர் சேகரிப்பு கிணறு அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கிவைத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 2-வது குடிநீர் சேகரிப்பு கிணறு அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கிவைத்தார்.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சைநகராட்சி கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தஞ்சை மாநகராட்சி 36.31 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகைப்படி தஞ்சை மாநகராட்சியில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 943 பேர் வசித்து வந்தனர். 2050-ல் 3 லட்சத்து 24 ஆயிரத்து 509 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சி மக்களுக்களுக்கு அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நிறுவப்பட்ட நீர் சேகரிக்கும் கிணறு மூலம் தினமும் 16 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. இது தவிர ஆழ்துளை கிணறுகள் மூலம் 7 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 69 லிட்டர் தண்ணீர் வீதம் வழங்கப்படுகிறது.
நீர் சேகரிப்பு கிணறு
கொள்ளிடம் ஆற்றில் நிறுவப்பட்ட நீர் உறிஞ்சி கிணறு 1975-ம் ஆண்டு நிறுவப்பட்டதால் அதன் உறிஞ்சும் திறன் குறைந்து வருகிறது. இதையடுத்து வளர்ந்து வரும் மக்கள் தேவையை சமாளிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல் துறை மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டங்களை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியது.
அதன்படி குடிநீர் அபிவிருத்தி பணிகள் ரூ.189 கோடியே 75 லட்சம்செலவில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் புதிய 2 குடிநீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்படுகிறது. இதில் ரூ.40 கோடி செலவிலான கிணறு அமைக்கப்பட்டு விட்டது. ரூ.22 கோடி செலவிலான 2-வது கிணறு அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
135 லிட்டர் தண்ணீர்
இதனை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், சுபாஷ்சந்திரபோஸ், மற்றும் ஒப்பந்த பணி மேற்பார்வையாளர் எழிலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இரண்டு கிணறுகளும் பணி முடியும் தருவாயில் தஞ்சை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் 35 ஆண்டுகள் முழுமையாக தண்ணீர் வழங்க இயலும். இதன் மூலம் தண்ணீர் தட்டுபாடு இல்லாத நகரமாக தஞ்சை விளங்கும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story