தற்காலிக டாக்டர்கள் பணியை நிரந்தரமாக்க கோரிக்கை


தற்காலிக டாக்டர்கள் பணியை நிரந்தரமாக்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 March 2022 1:48 AM IST (Updated: 25 March 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தி தற்காலிக அடிப்படையில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள், கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்தனர்.

சேலம்:-
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தி தற்காலிக அடிப்படையில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள், கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்தனர்.
ஒப்பந்த டாக்டர்கள்
கொரோனா காலத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் பலர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கொரோனா என்ற கொடிய நோயால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு ஆணைக்கிணங்க சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நேர்காணலில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறோம். கொரோனாவின் உச்ச கட்ட நிலையில் நாங்கள் எங்கள் குடும்பங்களை பிரிந்து இரவு, பகல் பாராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம்.
பணிபுரிய அனுமதிக்க வேண்டும்
தற்போது எங்களுடைய தற்காலிக பணிகாலம் இந்த (மார்ச்) மாதத்துடன் முடிவடைகிறது. எனவே நெருக்கடியான கால கட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியதையும், எங்கள் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
மேலும் மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு எடுக்கும் போது, எங்களை மருத்துவ அலுவலர்களாக நிரந்தரமாக நியமிக்க வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story