வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை


வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 25 March 2022 1:50 AM IST (Updated: 25 March 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சேலம்:-
கொளத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
பாலியல் தொந்தரவு
கொளத்தூர் தார்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 8 வயதுடைய சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தார். அப்போது சிறுமியின் சத்தத்தை கேட்டு உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்த கணேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
5 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. மேலும் இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்காக கணேசனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.

Next Story