2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 March 2022 1:59 AM IST (Updated: 25 March 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் குற்ற வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த மைக்கேலின் மகன் ரமேஷ்(வயது 30) மற்றும் குரும்பலூரை சேர்ந்த ராமலிங்கம் மகன் விக்னேஷ் (29) ஆகிய 2 பேரை பாலியல் குற்ற வழக்கில் ஏற்கனவே பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் ரமேஷ், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று ரமேஷ், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார், குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள ரமேஷ், விக்னேசிடம் வழங்கினர். மேலும் ரமேஷ், விக்னேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, பெண் போலீஸ் செல்வமணி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பாராட்டினார்.

Next Story