மதனகோபால சுவாமி கோவிலில் திருத்தேர் 8-ம் திருவிழா
மதனகோபால சுவாமி கோவிலில் திருத்தேர் 8-ம் திருவிழா நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட பெருமைபெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதில் திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், மஞ்சள் நீர், விடையாற்றி விழா ஆகியவை வெகு விமரிசையாக நடந்தது. இதனைத்தொடர்ந்து திருத்தேர் 8-ம் திருவிழா செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் நேற்று நடந்தது. இதனையொட்டி காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இரவில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் திருமூர்த்திகளுடன் பெருமாள் ஏகாந்த சேவையுடன் வீற்றிருக்கும் காட்சியுடன் சுவாமி புறப்பாடு நடந்தது. அப்போது தவில், நாதஸ்வர கச்சேரியும், மேல கச்சேரியும் நடந்தது. செண்டை, சிங்காரி மேள வாத்தியங்கள் முழங்கப்பட்டன. இந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருத்தேர் 8-ம் திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருக்கோவில் சீர்பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர். பங்குனி உத்திர பெருந்திருவிழா நிறைவடைந்தது.
Related Tags :
Next Story