பண்ணாரி ேகாவிலில் சிம்மவாகனத்தில் அம்மன் புஷ்பரத உலா
பண்ணாரி கோவிலில் சிம்ம வாகனத்தில் அம்மன் புஷ்ப ரத உலா நடந்தது.
சத்தியமங்கலம்
பண்ணாரி கோவிலில் சிம்ம வாகனத்தில் அம்மன் புஷ்ப ரத உலா நடந்தது.
பக்தர்கள் தீ மிதித்தனர்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில். இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டு்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து 15-ந் தேதி கம்பம் நடப்பட்டது.
முக்கிய நிகழ்வான குண்டம் விழா கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
புஷ்ப ரத உலா
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் புஷ்ப ரதம் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மின்சார விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உள்ள சிம்மவாகனத்தில் அம்மனின் உற்சவர் சிலை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மாட்டு வண்டியில் சப்பரத்தை வைத்து கோவிலை சுற்றி பக்தர்கள் வலம் வந்தார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story