புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு சீல்


புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 25 March 2022 3:03 AM IST (Updated: 25 March 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு சீல்

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி சத்திரம் வீதி, ஜவகர் மெயின் ரோடு, பவானிசாகர் ரோடு, மாதம் பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான 126 கடைகள் உள்ளன. இவற்றில் 67 கடை உரிமையாளர்கள் பல மாதங்களாக நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் ரூ.11 லட்சம் பாக்கி வைத்துள்ளதாக கூறி நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின்பேரில் மேலாளர் செந்தில் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் சத்திரம் வீதி, ஜவகர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 8 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story