வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்க முயற்சி


வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்க முயற்சி
x
தினத்தந்தி 25 March 2022 3:19 AM IST (Updated: 25 March 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது

கே.கே.நகர்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர், நல்லதண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் நாராயணன்(வயது 63). இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்க முயன்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் கொடுத்த புகாரின்பேரில், சென்னையில் இருந்து வீடு திரும்பிய நாராயணன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ஆனால், பணம்-நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து நாராயணன் கொடுத்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story