கடையம்: பொதுமக்களுக்கு நல உதவிகள்


கடையம்: பொதுமக்களுக்கு நல உதவிகள்
x
தினத்தந்தி 25 March 2022 3:43 AM IST (Updated: 25 March 2022 3:43 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

கடையம்:
கடையம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பயனாளிகளுக்கு நலஉதவியாக அரிசிப்பை வழங்கி சிறப்புரையாற்றினார். கரூர் முரளி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 
நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுதன் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி ஜெய்லானி, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரவி, மதிவாணன், பிரம்மநாயகம், துரைபாண்டியன், குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் முகைதீன் பீவி அசன், சாருகலா ரவி, மதியழகன், யாக்கோபு, கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஆலங்குளம் ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ஜெயக்குமார், அழகுசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story