‘நித்யானந்தா மீது தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்’ கர்நாடக டி.ஜி.பி.க்கு வெளிநாட்டு பெண் கோரிக்கை
‘நித்யானந்தா மீது தயவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக டி.ஜி.பி.க்கு வெளிநாட்டு பெண் கோரிக்கை வைத்துள்ளார்
பெங்களூரு: ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு தியான பீடம் உள்ளது. தற்போது கைலாசா எனும் தனி நாட்டில் நித்யானந்தா இருந்து வருகிறார். நித்யானந்தா மீதுள்ள வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இதற்கிடையில், ராமநகர் மாவட்டம் பிடதி போலீசாருக்கு வெளிநாட்டை சேர்ந்த சாரக் லாண்டரி என்ற பெண், நித்யானந்தா, அவரது சீடர்கள் தனக்கும், ஆசிரமத்தில் உள்ள சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இ-மெயில் மூலம் புகார் அனுப்பி வைத்திருந்தார்.
ஆனால் இ-மெயில் மூலம் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க சாத்தியமில்லை. யாருக்கும் பயப்படாமல் இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள ஏதாவது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அந்த பெண்ணுக்கு பிடதி போலீசார் பதிலளித்திருந்தனர். இந்த நிலையில், அந்த வெளிநாட்டு பெண் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நித்யானந்தா மீது இ-மெயில் மூலமாக புகார் அளித்தும் எதற்காக வழக்குப்பதிவு செய்யவில்லை. அவர் மீது தயவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யை வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story