குடிசைக்கு தீ வைத்த வாலிபர் கைது
எடப்பாடி அருகே குடிசைக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
எடப்பாடி:-
எடப்பாடி அருகே உள்ள கோரணம்பட்டி கிராமம் வாழக்குட்டை காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 70). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆனாலும் அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டு தனியாக குடிசையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் வாசலில் கோவிந்தன் தூங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் குடிசைக்கு தீ வைத்து விட்டு ஓடி உள்ளார். இதனால் குடிசை தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீயில் வீட்டில் இருந்த பணம், துணிகள் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
மேலும் ெகாங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கோவிந்தனுக்கும், வெண்டனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் துரைமுருகன் (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், இதனால் அவரது வீட்டுக்கு துரைமுருகன் தீ வைத்ததும் தெரியவந்தது. இதைத்ெதாடர்ந்து போலீசார் துரைமுருகனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story