மாணவியிடம் பாலியல் அத்துமீறல்வாலிபர் தலைமறைவு


மாணவியிடம் பாலியல் அத்துமீறல்வாலிபர் தலைமறைவு
x
தினத்தந்தி 25 March 2022 5:30 PM IST (Updated: 25 March 2022 5:30 PM IST)
t-max-icont-min-icon

மாணவியிடம் பாலியல் அத்துமீறல்வாலிபர் தலைமறைவு

திருப்பூரில் கடந்த மாதம் 14 வயது அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு  படிக்கும் மாணவியை காணவில்லை என்று திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  விசாரணையில் அந்த மாணவி  உசிலம்பட்டியில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் உசிலம்பட்டி சென்றனர். அப்போது அந்த மாணவியுடன்  பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகராஜ் இருப்பது தெரிவந்தது. இதையடுத்து  ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றி உசிலம்பட்டி அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதாக போலீசாரிடம் மாணவி தெரிவித்தார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் நாகராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

----

Next Story