பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி சேவையை வழங்க கோரிக்கை


பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி சேவையை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 March 2022 5:40 PM IST (Updated: 25 March 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவையை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஓய்வூதியர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் ஜெயராஜ் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி:
பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவையை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் ஜெயராஜ் வலியுறுத்தினார்.
மாநாடு
அகில இந்திய பி.எஸ்.என்.எல், தொலைதொடர்பு துறை ஓய்வூதியர் சங்க 6-வது மாநில மாநாடு தனியார் மகாலில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு மாநில தலைவர் நரசிம்மன், வரவேற்பு குழு தலைவர் ரசல் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில உதவி செயலாளர் முத்துகுமார சுவாமி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். வரவேற்புகுழு பொதுச் செயலாளர் ராமர், மாநில செயலாளர் குப்புசாமி ஆகியோர் வரவேற்று பேசினர். அகில இந்திய பொதுச் செயலாளர் ஜெயராஜ் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அகில இந்திய துணைத் தலைவர் மோகன்தாஸ், துணை பொதுச் செயலாளர் செல்லப்பா, துணை பொருளாளர் பங்கஜ வள்ளி ஆகியோர் பேசினர்.
4 ஜி சேவை
மாநாட்டில் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் ஜெயராஜ் பேசும் போது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவையை வழங்க உடனடியாக அனுமதிக்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் மாற்றம் வழங்கியது போல் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். 2019 முதல் வழங்கப்படாமல் இருக்கும் மருத்துவ படி, 9 மாத பஞ்சப்படியை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை, அதனை உடனடியாக வழங்க வேண்டும். வருகிற 28, 29-ந் தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு எங்கள் சங்கம் முழு ஆதரவு வழங்கி போராட்டத்தில் பங்குபெறும் என்று கூறினார்.
மாநாட்டில் மாநில செயலாளர் குப்பன், பொருளாளர் நடராஜா, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், வினோத்குமார், பெர்லின் ஆலிஸ் மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story