ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதியில் சனிக்கிழமை மின்தடை


ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதியில் சனிக்கிழமை மின்தடை
x
தினத்தந்தி 25 March 2022 7:05 PM IST (Updated: 25 March 2022 7:05 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மின்தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மஞ்சள்நீர்க்காயல், ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீவைகுண்டம், வெம்பூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், நாகலாபுரம் துணை மின்நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கிறது. இதனால் மஞ்சள் நீர்க்காயல் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்கானி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளிலும், ஸ்ரீமூலக்கரை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சி பட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம் பண்ணைவிளை, பண்டாரவிளை ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்திபட்டி ஆகிய பகுதிகளிலும், வெம்பூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, அழகாபுரி, வெம்பூர், மேலக்கரந்தை, சிவலார்பட்டி, கைலாசபுரம், எல்.வி.புரம், மேலஅருணாசலபுரம், கீழஅருணாசலபுரம், அயன்கரிசல்புரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், நாகலாபுரம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட நாகலாபுரம், கவுடண்பட்டி, புதூர், பூதலாபுரம், துரைசாமிபுரம் வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story