வீடுபுகுந்து பெண்ணை தாக்கியவர்கள் கைது


வீடுபுகுந்து பெண்ணை தாக்கியவர்கள் கைது
x
தினத்தந்தி 25 March 2022 7:48 PM IST (Updated: 25 March 2022 7:48 PM IST)
t-max-icont-min-icon

வீடுபுகுந்து பெண்ணை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்தல்வாகித் மனைவி மரியம்பீவி (வயது65). இவருக்கு சொந்தமான நிலத்தினை அதேபகுதியை சேர்ந்த அபுகனி ராவுத்தர் மகன் அபுல்ஹசன் (65) என்பவர் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அனுபவித்து வந்துள்ளார். இதனை அறிந்த மரியம்பீவி உரிய ஆவணங்களுடன் மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி மாவட்ட பதிவாளர் அபுல்ஹசனின் பத்திர பதிவை ரத்து செய்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அபுல்ஹசன் நேற்று முன்தினம் கும்பலாக சென்று மரியம்பீவியை வீடுபுகுந்து தாக்கி பொருட்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றாராம். இதுகுறித்து மரியம் பீவி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து சக்கரக்கோட்டையை சேர்ந்த அப்துல்ஹக்கீம் மகன் நாகூர்கனி (35), அப்துல்ஜலீல் மகன் பரக்கத் (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான அபுல்ஹசனை தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story