திருச்செந்தூரில் செல்போன் திருடியவர் கைது
திருச்செந்தூரில் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்
திருச்செந்தூர்:
கயத்தாறு எஸ்.ஆர்.ஓ. தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மகன் சங்கரநாராயணன் (28). இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது, கோவில் வளாகத்தில் உள்ள கல் மண்டபத்தில் தங்கியுள்ளார். நேற்று அதிகாலையில் தனது தலைக்கு பக்கத்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். அவரை விரட்டி பிடித்து திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வள்ளியூர் வடலிவிளை வடக்கு தெருவை சேர்ந்த மதியழகன் மகன் சிங்கதுரை (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் வழக்குப்பதிவு செய்து, சிங்கதுரையை கைது செய்தார். பின்னர் அவரிடம் இருந்த செல்போனையும் போலீசார் மீட்டனர்.
Related Tags :
Next Story