மாணவியின் படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து மிரட்டல்


மாணவியின் படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து மிரட்டல்
x
தினத்தந்தி 25 March 2022 8:09 PM IST (Updated: 25 March 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

மகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து மிரட்டல் விடுத்துவரும் வாலிபர் மீது ராமநாதபுரம் மாவட்ட காவல்அலுவலகத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

ராமநாதபுரம், 
மகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து மிரட்டல் விடுத்துவரும் வாலிபர் மீது ராமநாதபுரம் மாவட்ட காவல்அலுவலகத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
மனு
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பிளஸ்-2 படிக்கும் மாணவியின் பெற்றோர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்களின் மகள் பிளஸ்-2 படிப்பதற்காக செல்லும்போது எங்கள் ஊரைச் சேர்ந்த சிவன்ராஜ் என்பவர் அவரை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய செல்போனில் எங்களின் மகளை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது மிரட்டி பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளார்.
 இதனால் அச்சமடைந்து எங்களின் மகள் தகவல் தெரிவித்ததன்பேரில் கீழக்கரை காவல்நிலையத்தில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வாலிபரை கைது செய்யாமல் உள்ளதால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வழக்கை வாபஸ்பெறுமாறு மிரட்டி வருகிறார். 
குடிநீர்
அதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்து எங்களின் மகளின் புகைப்படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனை கண்ட நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மேலும், எங்கள் வீட்டிற்கு வந்து மிரட்டி சென்றதுடன் நாங்கள் அவர்களின் தெருவழியாக நடந்து செல்லக்கூடாது என்று கூறி எங்கள் வீட்டிற்கு வரும் குடிநீர் வண்டியை வரவிடாமல் தடுத்துவிட்டனர். 
மிரட்டல்
இதனால் நாங்கள் 3 நாட்களாக குடிக்க தண்ணீரின்றி தவித்து வருகிறோம். எனவே, எங்கள் மகளின் வாழ்க்கையோடு விளையாடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி மிரட்டல் விடுத்து வரும் சிவன்ராஜ் மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுமீது காவல்துறை மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

Next Story