தொழில் நிறுவனங்களுக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு தாமதமின்றி நிவாரணம்; மந்திரி முருகேஷ் நிரானி தகவல்
தொழில் நிறுவனங்களுக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்கப்டும் என சட்டசபையில் மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் என்.ஏ.ஹாரீஷ் கேட்ட கேள்விக்கு தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்கள் அமைக்க நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க சிக்கலும் இல்லை. அதற்காகவே கர்நாடக தொழில் வளர்ச்சி வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் விவசாயிகளுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்கப்படும். இந்த நிவாரண தொகையில் நிலம் வாங்கும் விவசாயிகளுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 சதவீதமும், பதிவு கட்டணம் முழுமையாகவும் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு அவர்கள் விரும்பினால் நிவாரணத்திற்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரத்து 781 சதுரஅடி ஒதுக்கப்படும். அந்த மேம்படுத்தப்பட்ட நிலத்தை பதிவு செய்யும்போதும், முத்திரைத்தாள் கட்டணம் 50 சதவீதமும், பதிவு கட்டணம் முழுமையாகவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
நிவாரணத்தொகை சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரின் வங்கி கணகக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதனால் நிவாரணம் வழங்குவதில் எந்த பிரச்சினையும் ஏற்படுவது இல்லை.
இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.
Related Tags :
Next Story