தலைமறைவான குற்றவாளி கைது


தலைமறைவான குற்றவாளி கைது
x
தினத்தந்தி 25 March 2022 9:17 PM IST (Updated: 25 March 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

வயலில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

நயினார்கோவில், 
வயலில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கொலை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நாயனார்கோவில் யூனியன் சிறுவயல் கிராமத்தில் விவசாய பணிக்கு சென்ற உதயகுமார் மனைவி ராணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த நயினார்கோவில் காவல் நிலையம் சார்பில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில் கடலாடி தாலுகா கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முனீஸ்வரன் (வயது42) என்பவர் ராணியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் திருடிசென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதனைத்தொடர்ந்து மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலை உத்தரவின்பேரில் நயினார்கோவில் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெரியார் தலைமையில் போலீசார் பிரபாகரன், ஜெயகணேசன் மற்றும் பிரவீன்குமார் அடங்கிய தனிப்படை அமைப்பட்டது. போலீஸ் தனிப்படையினர் கடந்த 20 நாட்களாக முனீஸ்வரனை தேடிவந்தனர். இந்தநிலையில் நயினார்கோவில் அருகே உள்ள சாலியவாகனபுரத்தில் முனீஸ்வரன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. 
கைது
இதையடுத்து  நயினார்கோவில் போலீசார் அங்கு சென்று முனீஸ்வரனை கைது செய்தனர். மேலும் விசாரணையில் முனீஸ்வரன் கோவில்களில் உள்ள உண்டியல்களில் திருடுவதும், விவசாய நிலங்களில் தனியாக வேலை செய்யும் பெண்களிடம் நகையை பறித்து அவர்களை தாக்கி விட்டு செல்வதும் தெரியவந்தது.

Next Story