15 வாகனங்கள் பறிமுதல்; ரூ.2 லட்சம் அபராதம்


15 வாகனங்கள் பறிமுதல்; ரூ.2 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 25 March 2022 10:01 PM IST (Updated: 25 March 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

வெளிப்பாளையம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆணையின் படி, நாகை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, செயலாக்க பிரிவு மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இதில் அனுமதி சீட்டு, தகுதி சான்று, காப்பு சான்று, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என்றும், அளவுக்கு அதிகமான நபர்களை வாகனங்களில் ஏற்றி செல்கிறார்களா? என ஆய்வு செய்தனர்.
இந்த சோதனையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 2 ஆம்னி பஸ்கள் உள்பட 15 வாகனங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு வரியாக ரூ.1லட்சத்து 70 ஆயிரமும், அபராதமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும் விதிக்கப்பட்டன.பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story