மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் டாக்டராகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுரை
மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் டாக்டராகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுரை வழங்கி உள்ளார்.
குருபரப்பள்ளி:
மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் டாக்டராகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுரை வழங்கி உள்ளார்.
வெள்ளை நிற கோட்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 143 மாணவ-மாணவிகள் வெள்ளை நிற கோட் அணியும் விழா கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது. விழாவில் 143 மாணவ-மாணவிகளுக்கு வெள்ளை நிற கோட்களை கலெக்டர் வழங்கினார். இதில் மருத்துவகல்லூரி முதல்வர் அசோகன், துணை முதல்வர் சாத்விகா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், மருத்துவக்கல்லூரி நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள், டாக்டர்கள், மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் 46.03 ஏக்கர் பரப்பளவுடன் ரூ.338.95 கோடி மதிப்பீட்டில் 700 படுக்கை வசதிகள் மற்றும் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையுடன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. புதிய கல்லூரியாக இருப்பினும் இக்கல்லூரியில் பணியில் சேர்ந்துள்ள பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள்.
சேவையாற்ற வேண்டும்
மருத்துவப்படிப்பின் முக்கியத்துவத்தை கருதி மாணவர்கள் இதனை உணர்ந்து நன்கு படித்து பட்டம் பெற்று சமுதாயத்திற்கும், மக்களுக்கும் மகத்துவமான சேவை புரிந்திட உறுதியேற்க வேண்டும். மற்ற பணிகளில் பணியாற்றுபவர்கள் பணி ஓய்வு பெற்று விடுவார்கள். ஆனால் டாக்டர்களுக்கு அவ்வாறு இல்லை. பணி ஓய்வு என்பது டாக்டர்களுக்கு கிடையாது. அவர்கள் தமது வாழ்நாள் இறுதிவரை பணியாற்றிடுவார்கள்.
இந்த கல்லூரியின் மருத்துவ மாணவி ஒருவர் எனது படத்தை பென்சில் ஓவியமாக வரைந்து கொடுத்து என்னை பெருமைப்படுத்தி உள்ளார். ஒரு மருத்துவ மாணவி நல்ல ஓவியராக தனது திறமையை வளர்த்து வருவதும் பல்வேறு மாணவ, மாணவிகள் பரதநாட்டியம் மற்றும் நடனம் ஆடி உற்சாகபடுத்தியுள்ளதும் மிகவும் மகிழ்வான நிகழ்வுகளாகும். மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் டாக்டராகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story