100 நாள் வேலை திட்ட பணிகள்
கீழ்வேளூர் பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
சிக்கல்:
கீழ்வேளூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்ட பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி வரவேற்றார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். 1035 பேருக்கு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்ட அட்டையை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். தொடர்ந்து கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவில் மேற்கு கோபுர வாசல் பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், கீழ்வேளூர் வட்டார ஆத்மா கமிட்டி தலைவர் கோவிந்தராசன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், ஆத்மா கமிட்டி உறுப்பினர்கள் பழனியப்பன், அட்சயலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story