சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறு வாலிபர் கைது


சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறு வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 March 2022 10:59 PM IST (Updated: 25 March 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறு வாலிபர் கைது

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி ஆனந்தி(வயது 25). இவருக்கும் எதிர் வீட்டை சேர்ந்த விஜயகுமார் மனைவி சாந்தி(26) என்பவருக்கும் கோழி மேய்ந்தது சம்பந்தமாக 2 நாட்களுக்கு முன்பு வாய்ச்சண்டை நடந்தது.

இதன் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் நிஷாந்தி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆனந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நிஷாந்தி, அஞ்சலை, மீனா, திருமூர்த்தி(22) ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து திருமூர்த்தி என்பவரை கைது செய்தார்.


Next Story