நாமக்கல்லில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 11:21 PM IST (Updated: 25 March 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை கண்டித்து நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் ஜமாத்தார்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் ஐக்கிய ஜமாத் பேரவையின் மாவட்ட தலைவர் தவுலத்கான் தலைமை தாங்கினார். அஞ்சுமன் இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித் துணை முத்தவல்லி பாரூக் பாஷா வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நாமக்கல் மாவட்ட தலைவர் அஹதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா முகமது, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட பொதுச் செயலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர் ரெக்ஸ் ரஃபி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் அப்துல்லா ஹஸ்ஸான், நாமக்கல் ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் சாதிக் பாஷா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

Next Story