தக்கலையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


தக்கலையில்  முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 11:24 PM IST (Updated: 25 March 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

தக்கலையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

தக்கலை, 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்ததை கர்நாடக கோர்ட்டு உறுதிசெய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு தக்கலை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் செய்யதலி தலைமை தாங்கினார். பைசல்குதா ஹிஜாப் அணிவதின் அவசியம் குறித்து பேசினார். பெண்விடுதலை கட்சியின் நிறுவன தலைவர் சபரிமாலா சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக கோர்ட்டின் தீர்ப்பிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் தர்வேஷ்மீரான் நன்றி கூறினார். போராட்டத்தையொட்டி தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story