வேலூரில் வடமாநில பெண்ணிடம் செல்போன் பறித்தவருக்கு அடி-உதை


வேலூரில் வடமாநில பெண்ணிடம் செல்போன் பறித்தவருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 25 March 2022 11:43 PM IST (Updated: 25 March 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வடமாநில பெண்ணிடம் செல்போன் பறித்தவருக்கு அடி-உதை விழுந்தது.

வேலூர்

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நியூ சிட்டிங் பஜாரில் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் திடீரென பெண் கையில் வைத்திருந்த ஸ்மார்ட்போனை பறித்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திருடன்.., திருடன்.., என்று கூச்சலிட்டார். 

அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரட்டி சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து பின்னர் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், அவர் அணிந்திருந்த சட்டை கிழிந்தது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்கு முன்பு அந்த நபர் நைசாக பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story