லாரி மோதி பெண் சாவு


லாரி மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 25 March 2022 11:50 PM IST (Updated: 25 March 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் அருகே லாரி மோதியதில் பெண் பாிதாபமாக இறந்தாா்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள ஆலப்பாக்கம், பள்ளி நீரோடை பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். விவசாயி. இவருடைய மனைவி தனசெல்வி (வயது 32). இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் நேற்று காலை நெல்லிக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 

கடலூர் முதுநகர் பழைய போலீஸ் நிலையம் அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த, தன செல்வி மீது லாரி ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சாலையின் இடதுபுறமாக விழுந்த தேவநாதன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story