திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 March 2022 12:05 AM IST (Updated: 26 March 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைெபற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் ஏ. சி.சாமிகண்ணு, நகர செயலாளர் சுந்தரேசன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியு தொழிலாளர்கள் காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்றும் இல்லையென்றால் சம்பளத்தை தர மறுக்கும் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்டும், தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் நந்தி, கே.பி.மணி, வேணுகோபால், முருகன், பைரோஸ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story