மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் ஆர்ப்பாட்டம்


மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 March 2022 12:19 AM IST (Updated: 26 March 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மார்ச்.26-
தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் செண்பக செல்வி தலைமை தாங்கினார். செயலாளர் அனந்தலட்சுமி வரவேற்றார். ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முகமது, அபுதாஹிர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பால்பாண்டி, செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டடத்தில் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள 187 ஆய்வக நுட்பனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். ஆய்வக நுட்பனர்களுக்கான பதவி உயர்வினை உடனே வழங்க வேண்டும். புதிதாக தொடங்கப்படும் மருத்துவக்கல்லூரிகளில் கிரேட்-2 பணியிடத்துக்கு டி.எம்.எல்.டி. பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 10 வருடங்களாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆய்வக காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story