50 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த கரடி. ஏணி மூலம் மீட்க வனத்துறையினர் நடவடிக்கை
நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறிவிழுந்த கரடியை ஏணி மூலம் மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறிவிழுந்த கரடியை ஏணி மூலம் மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்த கரடி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டேரி டேம் அருகே உள்ள வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 35). இவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடிவந்த 2 வயதுடைய கரடி ஒன்று தவறி விழுந்தது தத்தளித்துள்ளது.
நேற்று காலை சண்முகம் விவசாய நிலத்துக்கு சென்றபோது கிணற்றுக்குள் கரடி தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருந்ததை பார்த்துள்ளார். உடனடியாக இதுகுறித்து திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற வனக்காவலர் திருநாவுக்கரசு இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
ஏணி மூலம் மீட்க நடவடிக்கை
அதன் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கரடியை மீட்க நடவடிக்கை எடுத்தனர். கரடி மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதால் கயிறு மூலம் மீட்க முடியாது என்பதால் கரடி தானாகவே மேலே வரும் வகையில் 40 அடி உயர ஒரு ஏணியும், 20 அடி உயர மற்றொரு ஏணியும் கிணற்றில் இறக்கியுள்ளனர். பகல் நேரத்தில் கரடி மேலே வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் இரவு வரை வனத்துறையினர் காத்திருந்தனர்.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story