காதலித்து கர்பமாக்கியவருக்கு திருமணம் செய்துவைக்கக் கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா


காதலித்து கர்பமாக்கியவருக்கு திருமணம் செய்துவைக்கக் கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா
x
தினத்தந்தி 26 March 2022 12:30 AM IST (Updated: 26 March 2022 10:42 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே காதலித்து கர்பமாக்கியவருக்கு திருமணம் செய்துவைக்கக் கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே காதலித்து கர்பமாக்கியவருக்கு திருமணம் செய்துவைக்கக் கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை

திருப்பத்தூர் மாவட்டம், சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது 25), இவருக்கு திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் வாணியம்பாடியை அடுத்த விஜிலாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடன், தனது தோழியின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஒரு வருடம் கோயம்பத்தூர் பகுதியில் வேலை பார்த்து வந்த நிலையில் முருகன், ஜோதியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனால் இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இதில் ஜோதி கர்ப்பமாகியுள்ளார்.

பெற்றோர் தாக்குதல்

இதனை தொடர்ந்து கடந்த 4-ந்் தேதி ஜோதியை திருமணம் செய்வதாக கூறி முருகன் வாணியம்பாடிக்கு அழைத்து வந்து தனியாக தங்க வைத்துள்ளார். பின்னர் முருகனை, ஜோதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை எடுக்காமல் முருகன் தலைமறைவாகி உள்ளார்.

இந்தநிலையில் நேற்று முருகனின் வீட்டிற்கு சென்ற ஜோதி முருகனின் பெற்றோரிடம் தானும், முருகனும் காதலிப்பதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜோதியை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ்நிலையம் முன் தர்ணா

இதனை தொடர்ந்து ஜோதி இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து தன்னை, முருகனுக்கு திருமணம் செய்துவைக்கக் கோரி போலீஸ்நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தி, முருகனை அழைத்துவந்து பேசினர். அதன்பேரில் இருவரும் சேர்ந்து வாழ்வதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.

Next Story