குழந்தை வளர்ச்சி திட்ட புத்தாக்க பயிற்சி
இளையான்குடி ஆயிரவைசிய திருமண மகாலில் குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஒருநாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடி ஆயிரவைசிய திருமண மகாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஒருநாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதை இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி அனைவரையும் வரவேற்றார். இளையான்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறு.செல்வராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பூலாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், சாத்தணி ஊராட்சி மன்ற தலைவர் சிராஜூதீன் ஆகியோர் அங்கன்வாடி பள்ளிகளில் நடைபெறும் குறைகளை சுட்டிக்காட்டினார்கள்.இதில் முனைவென்றி ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள், மேலாயூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பார்த்தசாரதி, இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையாளர் வசந்தாள் நன்றி கூறினார். இந்த பயிற்சி முகாமில் சத்தான உணவுகள் கண்காட்சி நடைபெற்றது.
Related Tags :
Next Story