திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சார்பில் 69 கலைஞர்களுக்கு இளங்கவி விருது


திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சார்பில் 69 கலைஞர்களுக்கு இளங்கவி விருது
x
தினத்தந்தி 26 March 2022 12:33 AM IST (Updated: 26 March 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச்சங்கம் சார்பில் 69 கலைஞர்களுக்கு இளங்கவி விருதை அருணை மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் எ.வ.வே.கம்பன் வழங்கினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச்சங்கம் சார்பில் 69 கலைஞர்களுக்கு இளங்கவி விருதை அருணை மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் எ.வ.வே.கம்பன் வழங்கினார்.


திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை அருணை வளாகத்தில் 69 கலைஞர்கள் பங்கு பெற்ற ‘வாழி நீ முதல்வா' எனும் தலைப்பில் கவியரங்கம்நடந்தது. நல்லாசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சின்ராசு, நகரமன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகரமன்ற உறுப்பினர் மண்டி ந.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பன் தமிழ்ச்சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார்.  கவியரங்கத்துக்கு  மங்கலம் ம.பிரபாகரன் தலைமை வகித்து நடத்தினார். வெற்றி தமிழர் பேரவை தலைவர் கார்த்திவேல்மாறன், கலை இலக்கிய பேரவை செயலாளர் நேரு, வழக்கறிஞர் அருள்குமரன், அமைப்பு சாரா தொ.மு.ச. செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

 கவிஞர்கள் வயலூர் மூ.பிரசன்னா, பாவலர் ப.குப்பன், க.சரவணன், மகாலட்சுமி கோபிநாத், ஆ.தே.முருகையன் உள்பட 69 கவிஞர்களுக்கு சிறப்பாடை அணிவித்து இளங்கவி விருதை சிறப்பு அழைப்பாளரான அருணை மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் எ.வ.வே.கம்பன் வழங்கி பேசுகையில், ‘‘தமிழக மக்களின் நலனுக்காக தமிழக முதல்- அமைச்சர்ஆற்றி வருகின்ற தொண்டுகள், சேவைகள், மக்கள் நலப்பணி திட்டங்கள் இந்தியாவிலேயே வேறு எந்த முதல்- அமைச்சரும் செய்யாதவை. இளமையில் இருந்தே கட்சி பணியாற்றி மிசா கொடுமைகளை அனுபவித்து தலைவர் கலைஞர் காட்டிய பாதையில் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கி வருகிறார். தியாகம், உழைப்பு, எழுத்தாற்றல், தொண்டு, சேவை, போராட்ட குணம் என தமிழக முதல்- அமைச்சர் பன்முகம் கொண்டவர் ’’ என்றார். முடிவில் உமாதேவி பலராமன் நன்றி கூறினார்.

Next Story