எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கரூரில் உற்சாக வரவேற்பு


எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கரூரில் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 26 March 2022 12:39 AM IST (Updated: 26 March 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் மேற்கொள்ளும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கரூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரூர், 
எல்லை பாதுகாப்பு படையின் பெண் வீராங்கனைகள் 36 பேர் உள்பட 70 பேர் கடந்த 8-ந்தேதி மகளிர் தினத்தன்று ஜம்மு-காஷ்மீர் லே லடாக் பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு, இந்திய ராணுவத்தில் பெண்கள் தேசப்பற்றுடன் பங்கேற்று சேவையாற்றும் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை 11.10 மணியளவில் கரூர் வந்தடைந்த வீரர்களுக்கு திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் கல்லூரி மாணவிகள் வரிசையாக நின்று தேசிய கொடியை ஏந்தி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மனோகரா கார்னர் ரவுண்டானா, திண்ணப்பா கார்னர், ஜவகர்பஜார் வழியாக வந்து திருவள்ளுவர் மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ரோஜா பூ கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கத்தினர் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சால்வை, மாலை அணிவித்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வீரர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story