சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நொய்யல்,
நொய்யல் அருகே நடையனூர் இளங்கோ நகரில் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் கடந்த 23-ந் தேதி பரமத்திவேலூர்- கொடுமுடி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அனுமதியின்றியும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக மறியலில் ஈடுபட்ட இளங்கோ நகரை சேர்ந்த கோபி உள்பட 30 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story