கலசபாக்கம் அருகே காளை விடும் விழா


கலசபாக்கம் அருகே காளை விடும் விழா
x
தினத்தந்தி 26 March 2022 12:48 AM IST (Updated: 26 March 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அகே காளைவிடும் விழா நடந்ததை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

கலசபாக்கம்

கலசபாக்கம் அகே காளைவிடும் விழா நடந்ததை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்பாலூர் கிராமத்தில் காளைகளுக்கிடையிலான ஓட்டப்போட்டி நேற்று காலை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்தும் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் வேன் மூலமாக கொண்டு வந்து போட்டியில் கலந்து கொள்ள வைக்கப்பட்டன.போட்டியை கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தி.சரவணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளை மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

லத்தேரி பகுதியைச் சேர்ந்த காளைமாடு குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்ததால் முதல் பரிசு ரூ,.60 ஆயிரம், காளை உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 60 காளை மாடுகளுக்கான ஆறுதல் பரிசுகள், உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன. போட்டியை ஏராளமான இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு ரசித்தனர். ஏற்பாடுகளை கீழ்பாலூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story