கலவை எந்திர வாகனம் மோதிய முதியவர் பலி
கலவை எந்திர வாகனம் மோதிய முதியவர் பலி
திருவெறும்பூர், மார்ச்.26-
திருவெறும்பூரையடுத்த வேங்கூர் ஊராட்சி குவளபாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. நேற்று தடுப்புச்சுவர் அமைப்பதற்காக கான்கிரீட் கலவை எந்திரவாகனம் சென்று கொண்டிருந்தது. இதனிடையே அதேஊரை சேர்ந்த சாம்பசிவம் (வயது 70) என்பவர் தனது வயலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வந்தார். இவர் வருவதை கவனிக்காமல் கலவை எந்திர வாகனம் பின்னோக்கி வந்து சாம்பவசிவம் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த அப்பகுதி மக்கள் கலவை எந்திர வாகனத்தை அடித்து உடைத்தனர். தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கலவை எந்திர டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி (27) என்பவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story