திருட்டு வழக்கில் வாலிபர் கைது. 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


திருட்டு வழக்கில் வாலிபர் கைது. 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 March 2022 12:51 AM IST (Updated: 26 March 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 7 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வாலாஜா

வாலாஜா படவேட்டம்மன் கோவில் அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் தீவிர விசாரணை நடத்தினர்.

 அதில் அவர் வி.சி மோட்டூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் புருஷோத்தமன் (வயது 21) என்பதும், பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காண்டீபன், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து அவவை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story