ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை விரைவாக முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை விரைவாக முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.
ஆய்வுக் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத் துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் உரம் இருப்பு குறித்தும், உழவர் சந்தை செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்துத் துறை பணிகள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.
விரைவாக முடிக்க வேண்டும்
கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசுகையில் பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்க வேண்டும், தமிழக அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கும், நிதி பெறுவதற்கும் சம்பந்தப்பட்ட துறைகள் மாவட்ட கலெக்டர் மூலமாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெற்று திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக பெற்று தரப்படும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story