நங்கம் பனையூர் காட்டுவாரியில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் அகற்றம்-பொக்லைன் எந்திரத்தை மறித்து போராட்டம்


நங்கம் பனையூர் காட்டுவாரியில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் அகற்றம்-பொக்லைன் எந்திரத்தை மறித்து போராட்டம்
x
தினத்தந்தி 26 March 2022 12:58 AM IST (Updated: 26 March 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

நெய்தலூர் தெற்கு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நங்கம் பனையூர் காட்டுவாரியில் 125 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்கள் பொக்லைன் எந்திரத்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

நச்சலூர், 
ஆக்கிரமிப்பு
நெய்தலூர் ஊராட்சிக்குட்பட்ட நெய்தலூர் தெற்கு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நங்கம் பனையூர் காட்டுவாரி உள்ளது. இக்காட்டுவாரியில் சுமார் 125 ஏக்கர் நிலத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் படி நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள். அதன்படி வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நங்கம் பனையூர் காட்டுவாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.
சாலை மறியல்
இதையறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் பொக்லைன் எந்திரத்தை மறித்து நச்சலூர்-நெய்தலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், குளித்தலை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செங்கல்வராயன், குளித்தலை தாசில்தார் விஜயா, குளித்தலை சப்-இன்ஸ்பெக்டர், நங்கவரம் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, நெய்தலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனைதொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் போலீசார் போராட்டம் நடத்தியவர்களை கலைத்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதையடுத்து, நங்கம் பனையூர் காட்டுவாரியில் பயிாிட்டு இருந்த உளுந்து உள்ளிட்டவைகளை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story