பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பார்த்ததை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 43), அரிசி ஆலை அதிபர். இவரது மகள் அக்சரா (13). இவர் கரூர் அருகே காக்காவாடி பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அக்சரா நீண்ட நேரம் செல்போன் பார்த்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த அக்சரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வடிவேல் கொடுத்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story